(UTVNEWS|COLOMBO) – தெஹிவளை மிருக காட்சிசாலையின் விலங்கியல் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வருகை கொடுப்பனவு அதிகரிப்பு ஆகிய கோரிக்கைகள் ஒரு வருடத்திற்கு மேலாக பூர்த்தி செய்யப்படவில்லை என தெரிவித்து இந்த அடையாள பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
எனவே, தமது அடையாள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தாவிடின் முழுமையான பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கு தெரிவித்துள்ளதாகவும் விலங்கியல் தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பு காரணமாக மிருக காட்சிசாலையின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், மிருக காட்சிசாலைக்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.