கேளிக்கை

சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவி சிலை

(UTVNEWS|COLOMBO) – மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் (Madame Tussauds Singapore) அருங்காட்சியகத்தில் இன்று முதல் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது.

குறித்த இந்த மெழுகு சிலை 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் இடம் பெற்ற ஸ்ரீதேவின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் ஒரு மெழுகு அருங்காட்சியகம். இங்கு மிகவும் பிரபலமான குறிப்பிட்ட விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், சூப்பர்ஸ்டார்கள் போன்றவர்களின் மெழுகு உருவங்கள் உள்ளன.

இந்நிலையில், கடந்த வருடம் மரணமடைந்த ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாக மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகம் தத்ரூபமாக மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளது.

ஆனால் ‘இது ஸ்ரீதேவி சிலை போல இல்லை அவர் மகள் ஜான்வி கபூர் போல உள்ளது’என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Related posts

பிரபல இசைக்கலைஞர் காலமானார்…

விலையுயர்ந்த ஆடம்பர பரிசு கொடுத்த அந்த பிரபல நடிகர்?

விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்