விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து உஸ்மான் நீக்கம்

(UTVNEWS|COLOMBO) – ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டிக்கான 12 பேர் அடங்கிய வீரர்கள் குழாத்தினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்று(03) அறிவித்துள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி நாளை(04) மன்செஸ்டர் நகரில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான உஸ்மான் கவாஜா நீக்கப்பட்டிருக்கின்றார். வேகப்பந்து நட்சத்திரமான மிச்செல் ஸ்டார்க் அவுஸ்திரேலிய அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கின்றார்.

உஸ்மான் கவாஜா நீக்கப்பட்ட நிலையில் அவரின் இடத்தினை அவுஸ்திரேலிய அணியில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் தலை உபாதை காரணமாக விலகியிருந்த ஸ்டீவ் ஸ்மித் அழைக்கப்பட்டுள்ளதாக என தெரிவிக்கப்படுகின்றன.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடிய உஸ்மான் கவாஜா 20.33 என்ற மோசமான துடுப்பாட்ட சராசரியினை காட்டியிருந்ததே, குறித்த போட்டியில் அவர் இடம்பெறாமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

நான்காவது ஆஷஸ் தொடரின் டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம்
டேவிட் வோர்னர்,
மார்கஸ் ஹர்ரிஸ்,
மார்னஸ் லபஸ்சக்னே,
ஸ்டீவ் ஸ்மித்,
ட்ராவிஸ் ஹெட்,
மேட் வேட்,
டிம் பெய்ன்(அணித்தலைவர்),
பேட் கம்மின்ஸ்,
பீடர் சிடில்,
மிச்செல் ஸ்டார்க்,
நதன் லயன்,
ஜோஸ் ஹேசல்வூட்

Related posts

யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறுகிறார் ரொனால்டோ

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!

புதுடில்லியில் இலங்கை வீரர்கள் செய்தது சரியே – இந்திய மருத்துவ நிபுணர்