சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMB0)- நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மற்றும் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

இரண்டு மணி நேர சுற்றிவளைப்பில் 582 பேருக்கு எதிராக வழக்கு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் வைத்தியசாலையில்