சூடான செய்திகள் 1

100 பேரில் 99 பேர் ரணில் இருந்தது போதும்

(UTVNEWS|COLOMBO) – தற்போது நாட்டு மக்களில் 10 பேர் இல்லை 100 பேரிடம் கேட்டாலும், நான் நினைக்கின்றேன் 99 பேர் ரணில் விக்கிரமசிங்க இருந்தது போதும் என கூறுவார்கள் என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரிய பின்னரே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட செயலாளரினால் வௌியிடப்பட்டிருக்கும் அறிக்கையானது ஒரு மோசடியான அறிக்கை என சட்டத்தரணி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமாயின் கட்டாயமாக வெற்றிப் பெறக்கூடிய நபருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேர்

காற்றின் வேகம் அதிகரித்து வீச கூடும்

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது