(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை எதிரவரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
————————————————-(update)
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு உத்தரவு
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் எல்பிட்டிய பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட பெயர்ப்பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சியின் செயலாளர் தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பை அறிவித்த போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.