வகைப்படுத்தப்படாத

முகப்பருவால் வந்த தழும்புகளை நீக்க என்ன செய்யலாம்?

(UTVNEWS|COLOMBO) – முகப்பருவையும், முகப்பருக்கலால் வந்த தழும்பையும் போக்கும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

முகத்தில் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.

* சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

* ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

* கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

* கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.

* எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.

* உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.

Related posts

Indian finds missing father in SL after 21 years through YouTube video

සමන් දිසානායක CID අත්අඩංගුවට.

மியன்மார் தொடர்பில் அமெரிக்காவின் வலுயுறுத்தல்