(UTVNEWS|COLOMBO)- பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களது 48 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(29) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.ப்ரியந்த தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்களுக்கு சமமாக, தங்களது சம்பளத்தினை ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரி பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று(28) முதல் இந்த பணிப்புறக்கணில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக அனைத்து பல்கலைகழகங்களின் நாளாந்த செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.