சூடான செய்திகள் 1

பிரதமரின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

(UTVNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாக்க, முன்னிலையாகியுள்ளார்.

விவசாய அமைச்சுக்கான கட்டிடம் குறித்து வாக்குமூலம் வழங்கவே பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விவசாய அமைச்சிற்கான கட்டடத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதிப் பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

எதிர்வரும் 28ம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் ஆரம்பம்