(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவுக்குழு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்காக ஜனாதிபதிக்கு பொருத்தமான தினம் ஒன்று தொடர்பில் அறியத்தருமாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதியின் பதிலளிப்பு கிடைக்கப்பெற்றதன் பின்னரே, தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு தினம் தீரமானமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.