சூடான செய்திகள் 1

பயங்கரவாத சம்பவம்; விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) -பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 14பேருக்கு  மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பதில் நீதவான் பயாஸ் றஸாக் உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி இரு மாதங்களிற்கு மேலான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் சிலர் இரு கிழமைக்கு முன்னர் விளக்கமறியலில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் யாவும் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Related posts

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

எதிர்வரும் 05ம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?