கிசு கிசுசூடான செய்திகள் 1

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?

 

(UTVNEWS|COLOMBO) -இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பில் தொடரின் போட்டி நடுவர்கள் ஐசிசி இடம் முறையிட தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முதல் 2018 டிசம்பர் 10 திகதி அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி ஒழுங்கு விதிகளை மீறுவதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்தது.

பின்னர் அவர் பந்து வீச்சு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரருக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று அறுவைச் சிகிச்சை

உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை

கனடாவில் துப்பாக்கிச்சூடு- 6 இலங்கையர்கள் பலி