சூடான செய்திகள் 1

புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர்; இன்றாவது தீர்மானிக்குமா?

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

குறித்த பேச்சு வார்த்தை இன்று மாலை பிற்பகல் 4.00 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இறக்குமதி பால்மாவுக்கும் விலைச் சூத்திரம்

லண்டன் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் வெளிநாட்டவர்களை சந்திப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடன் இணைந்தார்

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு