சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் 65-70 வேகமாக அதிகரிக்ககூடும்

(UTVNEWS|COLOMBO) – மேற்கு தெற்கு சப்ரகமுவ வடக்கு வடமத்திய மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் காற்றின் வேகம் 65-70 வேகமாக அதிகரிக்ககூடும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை கொழும்பு புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக செல்லும் திருகோணமலை வரையான கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் 70-80கிலோமீற்றராக அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்