சூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை விஜயம்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய நாடுகளின் சமய சுதந்திரம் தொடர்பான அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இலங்கை எவ்வாறு மேம்படுத்தி வருகிறது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது அரசாங்கத்தின் அதிகாரிகள், சமய சமூகங்களின் அல்லது நமபிக்கைகளைக் கொண்டிருக்கும் சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

Related posts

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு