(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி யார் என சொல்லவில்லை. ஜே.வி.பி. யார் என சொல்லவில்லை. ஜே.வி.பியின் கொள்கைகளைப் பார்த்து, ஜே.வி.பியினரும் பேசுவார்கள். அவர்களும் எங்களுடன் பேசுவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், யார் கூடுதலாக எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றார்களோ, யார் எமது கோரிக்கைகளை ஆதரிப்பார்கள், அந்த ஆதரிப்புக்களை யார் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள். என்ற அனைத்தையும் பரிசீலித்து தான் முடிவுகள் எடுக்கப்படும்.
கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் தான் இருக்கின்றது என்பதெல்லாம் தவறான கருத்து, தெரிவுகள் வெளிப்படையாக உள்ளன. யார் எங்களுடன், ஒத்துழைத்து, எமக்கு யார் வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு சொல்லி, ஒத்துழைப்பு தரக்கூடியவர்களை தான் ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வருவோம் என்றார்.
இதேவேளை, கோட்டாபயவிற்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டா என ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளிக்கையில், தற்போதைய நிலையில், கோட்டாபயவை ஆதரிப்பதா, அல்லது எதிர்ப்பதா என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்தார்.