சூடான செய்திகள் 1

கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி

(UTVNEWS | COLOMBO) –  தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரச்சார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

கம்போடியாவின் தலைநகராகிய நொம் பென்னில் அமைந்துள்ள Wat Langka Preah Kosomaram விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் நேற்று(10) முற்பகல் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளுக்காக இருநாட்டு தூதரக நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மேலும் கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அந்நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக கம்போடியாவில் கொன்சுலர் ஒருவரையும் இலங்கையில் கம்போடிய கொன்சுலர் ஒருவரையும் நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Related posts

கஞ்சிப்பானை இம்ரானை 09 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

ரணிலுடன் இணைந்து, சுகாதார அமைச்சராகும் ராஜித!!

மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில் Dr.ஷாபி!