சூடான செய்திகள் 1விளையாட்டு

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து அம்லா ஓய்வு

(UTVNEWS | COLOMBO) – தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் அஸிம் அம்லா தனது 36 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தாம் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்த அம்லாவுக்கு நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரே இறுதி சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது.

அம்லா 124 டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்களுடன் 9282 ஓட்டங்கள், 181 ஒருநாள் போட்டியில் 27 சதங்களுடன் 8113 ஓட்டங்கள், 44 இருபதுக்கு 20 போட்டிகளில் 1277 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்