கேளிக்கைசூடான செய்திகள் 1

விஜய்சேதுபதியுடன் ஷாருக்கான் – வைரலாகும் புகைப்படம் (photo)

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திக்கு ‘மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா’ வில் திரையிடப்பட்டது.

சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் தேர்வாகியுள்ளது. அதுமட்டுமன்றி விருதைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள், இப்படத்தைப் பற்றி பெருமையாகவும் பேசியுள்ளனர். இதன் விருது வழங்கும் விழா, மெல்போர்னில் நடந்து வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்றுள்ள விஜய் சேதுபதி, பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான் மற்றும் கரண் ஜோகர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விழா இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 60க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது…

ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

வாரியபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு