(UTVNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளன. இம்மாதம் 31 அம் திகதி வரை இந்த பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 198,229 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.
இதற்காக நாடளாவிய ரீதியில் 2678 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.