(UTVNEWS|COLOMBO ) – ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதன்முறையாக ஜெர்சியில் (கிரிக்கெட் அணி வீர்களின் உடை) வீரர்களின் இலக்கம், பெயர் இருக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. .
உலக கோப்பை கொண்டாடப்படுவதை போலவே, ஆஷஸ் தொடரும் பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது.
இந்த தொடரில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஜெர்சியில் வீரர்களின் பெயர்கள், எண்கள் இணைக்கப்பட்டிருந்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்நாட்டு அணியின் ஆஷிஸ் தொடர் தலைவர் ரூட்டின் புகைப்படத்துடன் வெளியிட்டது.
இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆதம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஜெர்சி இலக்கம், பெயர்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தனது டுவிட்டர் பக்கத்தில்,
‘டெஸ்ட் தொடரில் வீரர்கள் இலக்கமும் பெயரும் கொண்ட ஜெர்சியில் விளையாடுவதை நான் எதிர்க்கிறேன். இது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஐசிசியின் ஒவ்வொரு மாற்றத்தையும் வரவேற்கிறேன். ஆனால், இந்த முறை மிகவும் தவறான ஒன்றுதான்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த தொடரில் இன்று இந்திய அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோத உள்ளது. குறித்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் முதன்முறையாக பெயர்கள், இலக்கம் கொண்ட ஜெர்சியினை அணிந்து விளையாட உள்ளதாக கூறப்படுகின்றன.