சூடான செய்திகள் 1

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அரசு நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கஜந்த கருணாதிலக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு இதுவரை தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை என்று ஏதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

கூட்டுத்தாபனம், நியாயாதிக்கசபை நிறுவனங்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு இந்த 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர் கஜந்த கருணாதிலக தொடர்ந்து தெரிவிக்கையில் எமது அரசாங்கத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டு இலக்கம் 3 இன் கீழான தேசிய வேதன சம்பள கொடுப்பனவிற்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாவாக செலுத்தப்படவேண்டும்.

இந்த அடிப்படை சம்பளமான 10,000 ரூபா 12,500 ரூபாவாக அதிகரிப்பதற்காக அதாவது 2,500 ரூபாவால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு என்னால் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி அன்று சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கிகாரத்தை பெற்றுக்கொண்டதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்காக சட்ட வரைவிற்காக அந்த பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நான் சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

Related posts

சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் – சுகாதார அமைச்சு

UTV செய்திகளுக்கு வாக்களிக்கவும்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்