(UTVNEWS | COLOMBO) – பிர்தானியாவில் இருந்து நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவு பொருட்களை அடங்கிய கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேல் நீதிமன்றத்தில் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கலன்கள் கொழும்பு துறைமுக கட்டுநாயக்க ஏற்றுமதி பொதியிடல் வலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தடை உத்தரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதேவேளை இந்த மனுவில் எதிர் தரப்பினருக்கு அறிவிப்பை விடுப்பதற்கு மேல் நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன உபயசேகர ஆகியோர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். இந்த மனு சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் பிரதிவாதிகளான சுங்க பகுதிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, ஹேனிஸ் பிறிஷன் நிறுவனம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.