சூடான செய்திகள் 1விளையாட்டு

ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் : இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம்

(UTVNEWS | COLOMBO) – தடை செய்யப்பட்ட அளவு ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாத காலம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளம் வீரரான பிரித்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என பலர் பாராட்டியுள்ளனர். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி 237 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன். அதில் ஒரு சதமும் உண்டு.

ஷயத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16 ஆம் திகதி அவர் மீது குற்றசாட்டும் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

சகலதுறை வீரர் தனஞ்சய லக்ஷன் முழங்காலில் உபாதை