சூடான செய்திகள் 1விளையாட்டு

இந்திய அணி பாகிஸ்தான் பயணம்

(UTVNEWS | COLOMBO) -பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் எதிரொலியாக இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாடுகள் இடையே டேவிஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்திருந்தது.

1964 இல் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண போட்டியில் இந்தியா 4-0 என்ற செட் கணக்கில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 14, 15 திகதிகளில் இஸ்லாமாபாதில் நடைபெறும் டேவிஸ் கிண்ண போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என இந்திய டென்னிஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

சமூக ஊடகங்களுக்கு சில விதிமுறைகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

யாழ். மல்லாகம் மோதல் சம்பவம் – இதுவரை 6 இளைஞர்கள் கைது

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது வரி அல்லது மேலதிக கட்டணம் அறவிட வேண்டாமென ஆலோசனை