சூடான செய்திகள் 1

முஸ்லிம் திருமண சட்ட திருத்தம்; ஆராய நால்வர் அடங்கிய குழு

(UTVNEWS | COLOMBO) -நிலையில் முஸ்லிம் தனியார் விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்துவது தொடர்பில் நீண்டகாலமாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு மட்டங்களில் இது தொடர்பாக ஆராயப்பட்டதோடு இறுதியில் இது சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பொறுப்பு முஸ்லிம் எம்.பிகளுக்கு வழங்கப்பட்டது. குறைந்த பட்ச திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்துதல், திருமணப் பதிவில் மணப்பெண் கட்டாயமாக கையொப்பம் இடுதல் உட்பட 11 விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிகளிடையே ஏற்கெனவே உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ள நிலையில் முஸ்லிம் எம்.பிக்களுக்கும் உலமா சபை முக்கியஸ்தர்களுக்கும் இடையில் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் வீட்டில் முக்கிய சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் தற்போதைய நிலைமை குறித்தும் பாதகமின்றி இதனை கையாள்வது பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.சுமார் இருமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் நிறைவில் குழு நியமிக்கப்பட்டதோடு குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் உலமா சபையும் முஸ்லிம் எம்.பிகளும் சந்தித்து இறுதி வரைபை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி