கேளிக்கைசூடான செய்திகள் 1

முத்தையா முரளிதரனாக பிரதி எடுக்கும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதக்காதி’ போன்ற வித்தியாசமான படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் 800 விக்கெட்களுக்கு மேல் எடுத்து பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளனர்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருட இறுதியில் ஆரம்பமாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

தமிழ் தேசிய கீதமும் தவறு : 13தேவையற்றது- SLPP MP

பாரம்பரிய கைவினைக் கண்காட்சி

விராட் கோலியாக நடிக்கும் துல்கர்