சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை தேயி​லை, ஒரு கப் தேநீர் இங்லாந்தில் இவ்வளவு விலையா?

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரே ” தி ரூபென்ஸ் ” என்ற ஹோட்டல் ஒன்றில் இலங்கைதேயிலையினால் தயாரிக்கப்படும் ஒரு கப் தேநீர் இங்கிலாந்தில் 200 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட 35 ஆயிரத்து 100 ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.

கோல்டன் டிப்ஸ் எனும் இந்த தேயிலைகள் வெல்வெட் துணியில் உலர்த்தப்படுகின்றன. இந்த ஹோட்டலுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இந்த தேயிலைகள் அனுப்பப்படுவதால் அங்கு அதிக விலைக்கு தேநீர் விற்பனை செய்யப்படுகிறது.

பக்கிங்ஹாம் அரண்மனையை ரசித்தபடி ஹோட்டலுக்குள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தேநீர் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க நடவடிக்கை

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்