சூடான செய்திகள் 1

வழமைக்கு திரும்பியது ருகுணு பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள்

ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தின் மூன்று பீடங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்பிடி மற்றும் கடல்வள பீடம் ஆகியனவே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்தனர்.

இதனால், வெல்லமடம வளாகத்தின் சில பீடங்களும் காலவரையறை இன்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘எளிய’ அமைப்பின் புதிய அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பம்

பாடசாலையில் இடம்பெற்ற திடீர் விபத்தில் மாணவி ஒருவர் பலி

வடக்கில், 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானம்