(UTVNEWS | COLOMBO) – விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 5 மணி நேரம் போராடி பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் – பெடரர் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் 7(7)-6(5) எனக் கைப்பற்றினார். 2ஆவது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றினார்.
3ஆவது செட்டை ஜோகோவிச் 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 4ஆவது செட்டை 6-4 என ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இதனால் நான்கு செட்களில் இருவரும் தலா இரண்டில் வெற்றி பெற்றதால் 2-2 என சமநிலைப் பெற்றனர்.
சாம்பியனை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் மல்லுகட்டினர். ஜோகோவிச் சர்வீசை தொடங்கினார். முதல் சுற்றை ஜோகோவிச் கைப்பற்றினார். 2-வது சுற்றை பெடரர் கைப்பற்றினார். 3-வது சுற்றை ஜோகோவிச் கைப்பற்றினார். ரோஜர் பெடரின் சர்வீஸ் செய்த 4-வது சுற்றை ஜோகோவிச் அட்டகாசமாக எதிர்கொண்டார். இருந்தாலும் கடைசியில் பெடரர் கைப்பற்றினார்.
இறுதியில் 5 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் ஜோகோவிச் 7-6, 6-1, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.