சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழு ஏன் நியமிக்க வில்லை? – முஜிபுா் ரஹ்மான்

 

(UTV|COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குற்றவாளியாக இனம் காணப்படுவார் என்று முஜிபுா் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி குண்டுத் தாக்குதலின் பின்னா் குழு ஒன்றை நியமித்தார். இதற்கு பதிலாக அவருக்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க முடியும். ஆனால் அவா் அதனை நியமிக்க வில்லை. அது ஏன்? ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தால் அவரும் குற்றவாளியாக இனம் காணப்படுவார்.

ஜனாதிபதி வேண்டும் என்றே தனது பொறுப்பிலிருந்து நழுவிய விடயம் வெளியே வந்து விடும். அது மட்டுமல்லாமல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மக்கள் முன் சமா்ப்பிக்கப்படவும் வேண்டும்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி, ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்காமல் மூன்று போ் கொண்ட குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையின் படி பொலிஸ் மா அதிபரையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் சிறையில் அடைத்துள்ளார்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவா் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 22ம் திகதி விசாரணைக்கு

சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடு விரைவில்