வணிகம்

வளிச் சீராக்கி தீர்வுகளில் புது யுகத்தை நோக்கி வழிநடத்தும் Singer

(UTV|COLOMBO)- பல வகையான சக்தி சேமிக்கும் மற்றும் சூழல்- நட்புறவான தீர்வுகளை பெரு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது

நாட்டின் முதற்தர வீட்டு உபயோக சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC,  அதன் பரந்த தயாரிப்புகள் மற்றும் நிகரில்லா சேவை உதவி ஆகியவற்றின் காரணமாக நிறுவனத்தின் வளிச்சீராக்கி வர்த்தகம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. Singer இன் வளிச்சீராக்கி வர்த்தகமானது உள்நாட்டு வர்த்தக நாமங்களான Singer மற்றும் SISIL, வெளிநாட்டு வர்த்தக நாமங்களான Hitachi மற்றும் Mitsubishi உள்ளிட்ட முன்னணி வளிச் சீராக்கி வர்த்தகநாமங்களை உள்நாட்டு நுகர்வோருக்காக கொண்டு வருவதுடன், தனித்துவமான, புத்துணர்ச்சிமிக்க தீர்வுகளை முழு இலங்கைக்குமே வழங்குகின்றது.

சுவற்றில் பொருத்தும், உட்கூரையில் பொருத்தும், உட்கூரை கெசட், நிலத்தில் நிற்கும் என பல்வேறு வகைப்பட்ட பிரிவுகளின் கீழ் வளிச் சீராக்கிகள் மூலம், உள்நாட்டு மற்றும் பெருநிறுவன துறை ஆகிய இரண்டிலும் Singer  தனது இருப்பை ஸ்தாபித்துள்ளது.  பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு multi split மற்றும் VRF (variable refrigerant flow)  ஆகிய வளிச்சீராக்கி அமைப்புகளை வழங்கும் மத்திய வளிச்சீராக்கி தீர்வுகளிலும் Singer  தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

குமார் சமரசிங்க, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் Singer Sri Lanka PLC கருத்து தெரிவிக்கையில், “உள்நாட்டு வளிச் சீராக்கி வர்த்தகத்தில் முன்னணி நிறுவனம் என்ற வகையில்,  உயர் தரமான பொருட்களை, அதிக தெரிவுகளுடன் கூடிய பரந்த தயாரிப்புகளை அர்ப்பணிப்புடன் வழங்கும் Singer  பெருமையுடன் உறுதியாக திகழ முடியுமென்பதுடன், வீடோ அல்லது பெருநிறுவனத்திற்கோ வளிச் சீராக்கியை தெரிவு செய்யும் போது தனிப்பட்ட கவனத்துடன் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றது.”

அவர் மேலும் தெரிவிக்கையில், ” பொறுப்புள்ள பெருநிறுவன பிரஜை என்ற வகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பேண்தகு வளிச் சீராக்கி தீர்வுகளை வழங்குவதன் அவசியத்தை நாங்கள் முழுமையாக அறிவோம். இன்வேர்ட்டர் தொழில்நுட்பம் மற்றும் சூழல் நட்பு குளிரூட்டிகள் (R32, R410a) ஆகியவற்றை உள்ளடக்கியதன் மூலம் எரிசக்தி சேமிப்பு மற்றும் சூழல் நட்பு தயாரிப்புகளை கொண்டுவருவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது. இன்வேர்ட்டர் தொழில்நுட்பமானது பாரம்பரிய வளிச் சீராக்கிகளை விட செயற்திறனை அதிகரிக்கின்றது. குளிரூட்டிகளான  R32 மற்றும் R410a ஆகியவற்றின் ஊடாக உயர் நிலை செயற்திறனையும், குறைந்த புவி வெப்பமடைதல் திறனையும் கொண்டிருப்பதனையும் Singer உறுதி செய்கின்றது. எமது பேண்தகு உற்பத்தி வரிசையானது, சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்வதுடன், வாடிக்கையாளர்கள் வெப்பத்தைத் தணிக்கும் சிறந்த வழிகளையும் வழங்குகின்றது.

Singer இன் வளிச் சீராக்கி வர்த்தகமானது, சிங்கரின் நன்கு அனுபவம் பெற்ற சேவை வழங்கும் உத்தியோகத்தர்கள் குழாமினால் இலவச தள ஆய்வு உள்ளிட்ட பெறுமதி சேர் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. அவர்கள் கவனமாக தள ஆய்வினை மேற்கொள்வார்கள், அதன் பின் மீது ஒவ்வொரு நுகர்வோரினதும் தேவைக்கும் ஏற்ற பொருத்தமான தீர்வு அறிவுறுத்தப்படும்.ஆய்வின் பின்னர் தொழில்நுட்பக் குழு தெரிவு செய்யப்பட்ட பொருட்களை அது பொருத்தப்படவுள்ள தளத்துக்கு இலவசமாக விநியோகம் செய்யும்,  பின்னர்  வளிச் சீராக்கி தீர்வுகள் குறித்த மேம்பட்ட தொழில்நுட்ப அறிவுடன் இலவசமாக பொருத்தப்பட்டு மூன்று இலவச சேவைகள் மிகுந்த தொழில்முறையுடன் முன்னெடுக்கப்படும், வாடிக்கையாளர் எமது சிறப்பு வாய்ந்த விலைக்கழிவுகள் மற்றும் இலங்கையிலுள்ள பல முன்னணி வங்கிகளின் கடனட்டை வாடிக்கையாளர்கள் விசேட சலுகையுடன் கூடிய  வட்டியில்லா கொடுப்பனவு மூலமும் நன்மையடைகின்றனர்.”

Singer வளிச் சீராக்கி வர்த்தகமானது அதன் இணையில்லா விற்பனைக்கு பின்னரான சேவை மற்றும் நம்பகமான Singer உத்தரவாதம் ஆகியவற்றுக்காக வாடிக்கையாளர்களின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந் நிறுவனம் உயர் தரமான சர்வதேச வர்த்தக நாமங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நன்கறியப்பட்டதுடன், 450 விற்பனை நிலையங்கள் மற்றும் பரந்துபட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் அதற்கு சமமாக ஸ்தாபிக்கப்பட்ட விற்பனைக்கு பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் ஊடாக தனது வாடிக்கையாளர் தளத்துடன் இணைந்துள்ளது. தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனம் நாட்டில் முதலிடத்தில் உள்ள மக்களின் வர்த்தகநாமமாக தெரிவாகியுள்ளது.

Related posts

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

கிரிஸ்புரோ தயாரிப்புக்கள் வளைகுடா பிராந்தியத்திற்கு ஏற்றுமதி