சூடான செய்திகள் 1

சுவிட்ஸர்லாந்து விபத்தில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)- சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட 25 வயதான ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிப்பு ?