வகைப்படுத்தப்படாத

6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

 

(UTV|COLOMBO)-  இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு ஆனதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுலவேசி தீவுக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கும் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் தங்களது வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர். வீதிகள் மற்றும் திறந்தவெளிகள் அவர்கள் சில நிமிடங்கள்வரை திரளாக கூடி நின்றனர்.

இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Related posts

England win Cricket World Cup

அரசாங்கம் மறுசீரமைப்பு பாதையில் இருந்து விலகியுள்ளது – சர்வதேச நெருக்கடிகள் குழு

அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி