(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ நீர்கொழும்பு நகரில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கட்டான பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடொன்றிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியமை மற்றும் அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றமை ஆகிய முறைப்பாடுகளுக்கமைய அவர் கைது செய்யபபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.