வகைப்படுத்தப்படாத

சசிகலா மற்றும் பன்னீரின் புதிய கட்சி பெயர்கள் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – தமிழகம் ஆர்கே.நகர் இடைத் தேர்தலில், போட்டியிடுகின்ற அண்ணா திரவிட முன்னேறக் கழகத்தினர், அந்த பெயரையும் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல்கள் ஆணையகம் இதனை அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது.

தற்போது சென்னை ஆர்.கே. நகரின் இடைத் தேர்தலில் இரண்டு தரப்பும் போட்டியிடுகின்ற நிலையில், கட்சியின் சின்னமாக இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்த இரண்டையும் பயன்படுத்த தடை ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டு கட்சிகளும் சிறிய மாற்றங்களுடன் ஒரே பெயரில் போட்டியிடவுள்ளன.

இதன்படி சசிக்கலா தரப்பினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா பிரிவு என்ற பெயரிலும், பன்னீர்செல்வத்தின் தரப்பினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – புரட்சித் தலைவி அம்மா பிரிவு என்ற பெயரிலும் போட்டியிடவுள்ளனர்.

Related posts

பாகிஸ்தான் vs பங்களாதேஷ்; பங்களாதேஷ் அணி அறிவிப்பு

தேர்தல் முடிவுகளில் பிரமித்து போன ஜனாதிபதி…..

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை பணிபகிஷ்கரிப்பில்