வகைப்படுத்தப்படாத

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று

(UDHAYAM, COLOMBO) – ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார்.

நேற்று மொஸ்கோ நகரைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு கௌரவ வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ரஷ்ய ராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது, பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1974ம்ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர், இலங்கையின் அரசத் தலைவர் ஒருவர் முதன்முறையாக அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

UN Special Rapporteur to arrive in SL today

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் கங்கிரஸ் முடிவு.

නියම වූ මිලට ඉන්ධන අලෙවි නොකරන්නන්ට එරෙහිව දැඩි නීති