சூடான செய்திகள் 1

நாட்டைச் சூழவுள்ள சில பகுதிகளுக்கு பலத்த காற்று வீசும் சாத்தியம்

(UTV|COLOMBO)  சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை