சூடான செய்திகள் 1

விசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் நாட்டில்

(UTV|COLOMBO)  விசா காலம் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 492 பேர் கடந்த ஐந்து மாதக் காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி இது வரையில் விசா அனுமதி காலத்திற்கும் மேற்பட்ட ரீதியில் 6782 வெளிநாட்டவர்கள் நாட்டில் தங்கியிருப்பதுடன் இவர்களுள் 1670 பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தின் பதிவு செய்யப்பட்டுள்ள அகதிகளாவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடக பேசச்சாளார் பி.ஜி.ஜி.மிலின்த தெரிவித்துள்ளார்.

இது வரையில் விசா அனுமதி பத்திரம் கால எல்லை முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 152 பேர் மிரிஹான குடிவரவு குடியகல்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.

இதே வேளை விசா கால எல்லை முடிவடைந்த பின்னர் நாட்டில் தங்கியிருப்போரை கைது செய்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளார் ( விசாரணை மற்றும் புலனாய்வு ) விபுல காரியவசத்தின் தலைமையில் அதிகாரிகள் நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

நாடு திருப்பினார் மைத்திரிபால சிறிசேன

காலநிலையில் மாற்றம்…