வகைப்படுத்தப்படாத

2 வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் மீது முழுமையான நம்பிக்கைகொண்டு அரசாங்கம் ஜக்கிய நாடுகள் சபையில் கோருவது போல இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் இன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்;.

பாடசாலையின் அதிபர் எஸ்.நந்தகோபால் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் மேலும் கூறியதாவது:

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான ஜயப்பாடும் இல்லை. நாங்கள் கடந்த கால 30 வருட யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.எனவே எங்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்பு பல நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த அரசாங்கத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு இரண்டு வருடகால அவகாச்த்தை அரசாங்கம் கோருவது போல வழங்கி அதனை நடைமுறைபடுத்துவதற்கான அழுத்தத்தை நாங்கள் கொடுக்க வேண்டும்.அந்த நிலைப்பாட்டில்தான் மலையக மக்களும் இருக்கின்றார்கள்.

இன்று மாணவர்களின் புத்தகத்தில் எங்களுடைய தமிழர் வரலாறு பல்வேறு இடங்களில் திரிபுபடுத்தப்பட்டிருக்கின்றது. இதனை யாரும் திட்டமிட்டு செய்தார்களா?அல்லது கடந்த காலங்களில் அது தொடர்பாக செயற்பட்டவர்கள் சரியாக செயற்படவில்லையா?என்ற கேள்வியை நாங்கள் கேட்க வேண்டியிருக்கின்றது. ஆனால் தற்பொழுது நான் இராஜாங்க கல்வி அமைச்சர் என்ற வகையில் அதனை முழுமையாக சரியான தமிழர் வரலாற்றை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.அதற்கு அந்த துறை சார்ந்தவர்களிடம் இருந்து ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளேன்.

எமது மனித வாழ்க்கையே நம்பிக்கையில்தான்; அனைத்தும் இடம்பெறுகின்றது. எனவே நாம் எந்த ஒரு விடயத்தை செய்தாலும் அதனை முழுமையான நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

வரலாற்று பாடங்களில் மாத்திரம் அல்ல இந்து சமய பாட நூல்களிலும் பல தவறுகள் இருக்கின்றது.பாடத்திட்டம் மிகவும் கடினமாக காணப்படுகின்றது.எனவே இவற்றையும் திருத்தி அமைக்க தற்பொழுது ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.எனவே இவற்றை கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பதில் நாங்கள் திருத்தி அமைக்காவிட்டால் இனிமேல் என்றுமே அதனை திருத்தி அமைக்க முடியாது. எனவே எந்த காரணம் கொண்டும் எமது தமிழர் வரலாற்றை திரிபுபடுத்த சந்தர்ப்பம் வழங்க முடியாது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்புகளையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், கல்வி அமைச்சின் கல்வி கற்கைகள் நிறுவக இணைப்பாளரும் ஆலோசகருமான கலாநிதி ஏ.சிவநேசராஜா,கல்குடா வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, கோட்டக் கல்வி பணிப்பாளர் பி.சிவகுரு, மட்டக்களப்பு பிரஜைகள் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கூட்டு எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் அதிகாரம் எனக்கில்லை – சபாநாயகர்

ගත වූ පැය 24ක කාලය තුල බීමත් රියදුරන් 243 දෙනෙකු අත්අඩංගුවට

ஜனவரி முதல் மே மாதம் வரை 1104 வீதி விபத்துக்கள்