(UTV|BANGLADESH) பங்களாதேஷில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ரயில் தலைநகர் டாக்காவின் கலவுர் பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றினூடாக பயணித்து கொண்டிருந்த போது தடம்புரண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி ரயில் தடம் புரண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.