விளையாட்டு

ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த இந்தியா

(UTV|COLOMBO) உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் இந்த வெற்றி கடும் போராட்டத்திற்கு பின்பே கிடைத்தது.

சவுதம்டனில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில், இந்திய அணி 11 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. 225 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை துரத்திய ஆப்கான் வீரர்கள் துவக்கத்தில் மிக அற்புதமாக விளையாடினர். எனினும், ஆட்டத்தின் பாதியில் விக்கெட்டுகள் மெல்ல மெல்ல சரியவே ஆட்டம் தடுமாறியது.

மேற்படி இந்த அணியின் நவாப் மிக அருமையாக விளையாடி ஆப்கான் வெற்றிக்காக இறுதி வரை போராடினார். கடும் நெருக்கடிக்கிடையே அரைசதமும் கண்டார். ஆயினும், கடைசி ஓவர் வீசிய முகமது ஷமி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆப்கான் அணி 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து, 225 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

 

 

 

Related posts

இலங்கை குழாம் இன்று பாகிஸ்தான் பயணம்

ஜோன் லெவிஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

கிறிஸ் கெயிலுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்