விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)- இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 233 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 47 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், லசித் மலிங்க அதிக விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி, 6 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

28 வருட வெற்றியினை விட்டுக்கொடுக்க தயாரில்லை

கிரிக்கெட் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை…

இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி