கேளிக்கை

ஷாருக்கான் மகன் ஆர்யன் அறிமுகம்

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஹாலிவுட்டின் தி லயன் கிங் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இதில் பின்னணி குரல் கொடுத்து ஆர்யன்கான் சினிமாவில் தனது பங்களிப்பை வழங்க இருப்பதாக பட வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த படம் இந்தியிலும் வெளியாகிறது.

அதில் சிம்பா என்ற சிங்கத்துக்கு ஆர்யன் கான் டப்பிங் பேசியிருக்கிறார். அதேபோல் காட்டு ராஜாவான சிங்கத்துக்கு ஷாருக்கான் டப்பிங் பேசியிருக்கிறார். ஆர்யன் கான் தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார். ஓரிரு ஆண்டில் அவர் ஹீரோவாக அறிமுகமாவார் என கூறப்படுகிறது.

Related posts

5வது மனைவியுடன் 10வது குழந்தை பெற்றுக்கொள்ளும் நடிகர்

ரஜினியின் தர்பார் படத்தை வெளியிட தடை

ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் பலி