வணிகம்

சுகாதார பராமரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் முடிவெடுத்தல்

(UTV|COLOMBO) சுகாதார பராமரிப்பு தொழில்நுட்பங்கள் பல நன்மைகளை வழங்குவதுடன், நோய்களைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும் மற்றும் சிகிச்சையளிப்பதற்கும் சுகாதார நிபுணர்களின் திறனை பெரிதும் மேம்படுத்தியுள்ளன. சுகாதார பராமரிப்பு தொழில்நுட்பங்களானது, ஒரு நல்ல செயல்திறன் கொண்ட சுகாதார அமைப்பின் முக்கிய கூறுகளாகும், ஏனெனில் அவை நடைமுறையில் அதிகமாகவும் பரவலாகவும் பயன்படுத்தப்படும் மருத்துவ தயாரிப்புகளாக இருக்கின்றன. சுகாதார விநியோகத்தின் தரத்தை STEEEP அளவுகோல்களான (பாதுகாப்பான, சரியான நேரத்தில், பயனுள்ள, வினைத்திறனான, சமமான மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட) ஊடாக மதிப்பீடு செய்யலாம். இருப்பினும், பல குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமான நாடுகள் பொதுவாக சுகாதார தொழில்நுட்பங்கள் கிடைக்காததால் அல்லது குறைந்த அளவு கிடைப்பதால் இவற்றை திருப்தி செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

நான்காவது தொழிற்புரட்சிக்கான நூற்றாண்டில் சுகாதார பராமரிப்பு துறையின் துரிதமான வளர்ச்சி முக்கிய சவாலாக இருக்கும். இந்த தகவல் நூற்றாண்டில், உலகில் வேறு எங்கும் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்களைப் பற்றி பலர் அறிந்திருப்பார்கள், சந்தைக்கு அவை வந்த உடனேயே இதுபோன்ற தொழில்நுட்பங்களை மக்கள் உடனே கோருவார்கள். எங்கள் தொழில்நுட்ப அமைப்பு வரி விதிக்கப்பட்ட பொது நிதி பொறிமுறையால் நிதியளிக்கப்படுவதால் புதிய தொழில்நுட்பங்களைப் பெறுவது எங்கள் சூழலில் மிகவும் சவாலானதாக இருக்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பெற்றுக்கொள்வது எமது சூழ்நிலையில் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் ஏனெனில் எமது சுகாதர அமைப்பானது வரியை அடிப்படையாகக் கொண்ட பொது நிதியியல் கட்டமைப்பின் ஊடாக நிதியிடப்படுவதனாலாகும்.

இந்தப் பின்னணியில், அமைப்பின் மூலமாக என்ன தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என்பதையும், நிதியுதவிக்கான எந்த பொறிமுறையை தழுவிக்கொள்ளுதல் என்பது தொடர்பிலும் அரசாங்கம் அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த செயல்பாட்டில், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுக்கும் திறன் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.

UK National Institute for clinical and Care Excellence (NICE) அத்தகைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பிற்கான ஒரு எடுத்துக்காட்டென்பதுடன், அந்த முதலீட்டு முடிவுகள் பிரச்சினை மற்றும் தீர்வு பற்றிய விரிவான, ஆழமான பகுப்பாய்வு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவத்தின் திறன் மற்றும் திறனான செலவீனம் ஆகியவற்றின் கூறுகளை கருத்தில் கொள்வதன் மூலம் நோயாளி நன்மையடைவதுடன், செலவீனம் என்ற ரீதியில் நாடும் நன்மையடைகின்றது. சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடானது (HTA) ஆதாரங்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றை முடிவுகளாக மாற்றுவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

எவ்வாறாயினும், நீங்கள் மேலாக பார்ப்பது போன்று தொழில்நுட்பம் என்றும் விலை கூடியதல்ல. நோயாளிக்கு நன்மையளிக்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நடைமுறையில் பல நன்மைகளை கொண்டு வரும் தலையீடுகள் இருக்க முடியும். சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது ஒரு சாதகமான கருத்தாகும், ஏனெனில் நமது மனித பணிகள் பல இப்போது இயந்திரங்களால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளன. சுகாதார பராமரிப்பும் இந்த விதிக்கு விலக்கல்ல.

தற்போதைய சூழலில் சுகாதாரப் பாதுகாப்பில் AI இன் சிறந்த எடுத்துக்காட்டு, சுகாதார விநியோகத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும். ட்ரோன்களை, செயற்கை நுண்ணறிவியலுடன் இணைக்கும் போது சுகாதாரத் துறையில் அவற்றால் பல புதுமைகளை செய்ய முடியும். ட்ரோன்கள் பல வகையில் நன்மையளிக்கும், குறிப்பாக செலவு குறைந்த சுகாதார பராமரிப்பு இடப்பெயர்ச்சியியல் தீர்வாக அமைகின்றது.
ட்ரோன்கள் மூலமாக அவசர இரத்தம், மருந்து மற்றும் பிற அவசர நுகர்வுப் பொருட்களை எந்தவொரு நியமிக்கப்பட்ட இடத்திற்கும் குறைந்தபட்ச மனித ஈடுபாட்டுடன் வழங்க முடியும். இந்த தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாக ருவாண்டா மற்றும் கானா போன்ற நாடுகளில் உபயோகிக்கப்படுகின்றன. இதன் மூலம் சுகாதார அதிகாரிகள் தங்கள் விநியோக முறைகளை மிகவும் மையப்படுத்தப்பட்ட முறையில் ஒழுங்கமைக்க முடிந்ததுள்ளது, அதைச் செய்வதன் மூலம், அவர்கள் தங்களது செயல்திறனை கிட்டத்தட்ட கையிறுப்பு பற்றாக்குறையே இல்லை எனக் கூறும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதுடன், சரியான நேரத்தில் வழங்குவது, சரியான நேரத்தில் – விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் மற்றும் விரயத்தை குறைத்தல் ஆகியவற்றுக்கு மேம்படுத்தியுள்ளனர்.

ஒரு பேரழிவு சூழ்நிலையின் போது, அணுகுமுறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும், (உதாரணமாக, 2004 இல் சுனாமி, அடிக்கடி வெள்ளம் மற்றும் நில சரிவு சூழ்நிலைகள், அடிக்கடி சாலை போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பெரும் விபத்து சூழ்நிலைகள்) அரிய வகை ரத்தம் மற்றும் அவசர மருந்துகள் மற்றும் நுகர்வுப்பொருட்களின் அவசர விநியோகங்களை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு சிறிய செலவில் மேற்கொள்ள முடியும்.

அவசர நிலைகளுக்கு மேலதிகமாக, நீடித்த பேரழிவு முகாமைத்துவம், சுகாதார ஊக்குவிப்பு மற்றும் தடுப்பு மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகளுக்காக கிராமப்புற அமைப்புகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக வழக்கமான சுகாதாரப் பாதுகாப்பு விநியோகத்தில் ட்ரோன்கள் மற்றும் தொடர்புடைய ஆஈ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் பல நாடுகள் எதிர்ப்பார்த்துள்ளன.

சுருக்கமாக, சுகாதார தொழில்நுட்பங்கள் பரிமாண வளர்ச்சியடைந்து வருவதுடன், மேம்பட்டும் வருகின்றது. அத்தகைய விரைவான முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் எந்த நாடும் தவிர்க்க முடியாது. அதிநவீன சுகாதார தொழில்நுட்பங்களை மக்கள் கோருவார்கள். சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு (HTA) மூலம் செயல்முறைத் தொகுப்பு மூலம் மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் சரியான நேரத்தில் சரியான தொழில்நுட்பத்தை முதலீடு செய்வது கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும்.

 

Related posts

வெதுப்பக உற்பத்திகளில் பாரிய வீழ்ச்சி

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

கிழங்கு வகை உற்பத்தி