வகைப்படுத்தப்படாத

சூப்பரான தேங்காய் பிஷ் பிரை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

மீன் – 500 கிராம்
சோளமாவு – 4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிதளவு
பூண்டு விழுது – அரை ஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
மிளகு பொடி – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

அடுத்து ஊற வைத்த மீனை பிரிட்ஜில் இருந்தது எடுத்து தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

Related posts

Sixteen hour Water cut for several areas of Colombo

கல்வி இராஜாங்க அமைச்ருக்கும் எனக்கும் அரசியல் போட்டி இல்லை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவிப்பு

தகவல் அறியும் சட்டம் தொடர்பாக முப்படை வீரர்களுக்கு விளக்கம்