வகைப்படுத்தப்படாத

தேசத்தின் பிதா டி.எஸ்.சேனாநாயக்க நிறைவேற்றிய பணிகள் உன்னதமானவை – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – தேசத்தின் பிதா டி.எஸ்.சேனாநாயக்க நிறைவேற்றிய பணிகள் உன்னதமானவை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அமரர் டி.எஸ்.சேனாநாயக்கவின் 65வது நினைவு தின நிகழ்வி;ல் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மலரஞ்சலி செலுத்தினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, ருக்மன் சேனாநாயக்க உட்பட பலரும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரைட்டஸ் பெரேரா மற்றும் கொழும்பு மாநகரசபையின் ஆணையாளர் டி.கே.அனுர ஆகியோரும் டி.எஸ்.சேனாநாயக்காவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

சுதந்திரத்தைப் பெற்றுக்  கொள்வதற்காக நாட்டை ஒன்றிணைத்ததவர் டி.எஸ்.சேனாநாயக்க. அனைத்து இனத்தவர்களும் இலங்கையர் என்ற அடையாளத்தை முன்னெடுத்த தலைவர் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய, டி.எஸ்.சேனாநாயக்கவின் வரலாறு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகும் என்று கூறினார்.

நாட்டின் 70வது சுதந்திர தினம் அடுத்த வருடம் இடம்பெறவள்ளது. அதன் போது தேசிய வீரர்கள் தினமும் கொண்டாடப்படுமென்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, தயா கமகே, நவின் திசாநாயக்க உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

Related posts

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம் – அமைச்சர் ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்…

தென்கொரிய பாப் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்த கிம் ஜாங்-உன்

மும்பையில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழப்பு