வகைப்படுத்தப்படாத

வீடுகளில் சூரிய மின்கலத் தொகுதிகளை அமைக்க குறைந்த வட்டியில் கடன்

(UDHAYAM, COLOMBO) – வீடுகளில் சூரிய மின்கலத் தொகுதிகளை அமைக்க குறைந்த வட்டியில் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி   பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இதற்காக வங்கிகளில் ஒன்றரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் ரூபா வரையிலான தொகையை கடனாகப் பெறலாம். இதற்குரிய வட்டியில் 50 சதவீத சலுகையை மின் பாவனையாளர்கள் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மாதாந்த மின் பட்டியல் இரண்டாயிரம் ரூபாவை தாண்டும் வீடுகளுக்கு சூரிய மின்கலத் தொகுதிகளை பெற்றுக்கொடுத்து, சூரிய மின்வலுவை பயன்படுத்த ஊக்கமளிப்பது திட்டத்தின் நோக்கமாகும். இதற்குரிய கடன் திட்டம் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

இலங்கையின் 40 சதவீதமான மின் பாவனையாளர்களது மாதாந்த மின்கட்டணப் பட்டியல் 300 ரூபாவை தாண்டுவதில்லை. எனவே, எவரும் புதுப்பிக்கக்கூடிய மின்வலு தோற்றுவாய்களை பயன்படுத்தும் வகையில் சகலரும் சூரிய மின்வலு தொகுதிகளை பெறக்கூடியவாறு கடன் வசதிகளை விஸ்தரிப்பதென தீர்மானித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியல் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்  பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா இந்த விடயங்களை குறிப்பிட்டதுடன்,  இதுதொடர்பாக

அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருப்பதாகவும் கூறினார்.

Related posts

தட்டம்மை நோயால் 1000க்கும் அதிகமானோர் பாதிப்பு

Maximum security for Esala Perahera

கடலில் விமானம் வீழ்ந்து விபத்து