சூடான செய்திகள் 1

சுவசரிய இலவச அம்பியுலன்ஸ் சேவை – கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்

(UTV|COLOMBO) 1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இதன் தலைமை நிறைவேற்று அதிகாரி ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்பியுலன்ஸ் சேவையின் மூலம் இதுவரையில் பொதுமக்களுக்குப் பெரும் நன்மை கிடைத்துள்ளதுடன், குறித்த இந்த சேவை மேல் மாகாணத்தில் விரிவான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் சுவசரிய பணியாளர் சபையில் 1440 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன் சாரதிகளும் முறையானப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு 1990 சுவசரிய இலவச அம்பியுலன்ஸ் சேவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வைத்தியசாலைக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் நோயாளருக்கு தேவையான துரித சிகிச்சையை வழங்குவதற்கான பணியாளர்களும் இந்த அம்பியுலன்ஸ் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

Related posts

சம்பள உயர்வு அல்லது 20 ஆயிரம்- நாடளாவியரீதியில் போராட்டம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

அபூர்வமான வெள்ளை நிற டொல்பினை பார்த்துள்ளீர்களா?..படுவைரலாகி வரும் வீடியோ