வகைப்படுத்தப்படாத

ஊழல் மோசடி ஒழிப்பு விடயம் தெர்பான நாடாளுமன்ற விவாதம்

(UDHAYAM, COLOMBO) – ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும், தாம் எதிர்கட்சி என்ற போதிலும் முழு ஆதரவையும் வழங்கவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின், ஊழல் சுற்றிவளைப்பு தொடர்பிலான சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக சீனிதம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதனிடையே மாகாண மட்டத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

Related posts

தற்காலிகமாக மூடப்படும் ஒரு நிரல் வீதி

கூரையில் ஏறி சிறைக்கைதி உண்ணாவிரதம்

கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு